மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, February 4, 2010

இன்டர்நெட் ஸ்பீடு கொரியா முதலிடம்


தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய கிழக்கு ஆசிய நாடுகள், அதிவேக இன்டர்நெட் சேவையில் முன்னிலை வகிக்கின்றன.
இதை உலகம் முழுவதும் நடந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. உலகின் அதிகபட்ச இன்டர்நெட் இணைப்பு சராசரி வேகத்தில் தென்கொரியா முதலிடம் வகிக்கிறது. அங்கு இன்டர்நெட் வேகம் விநாடிக்கு 14.6 மெகாபைட்ஸ். ஆசியாவின் 10 நகரங்களுடன் அது விநாடிக்கு 15 மெகாபைட்ஸ் வேகம் கொண்டுள்ளது.
இரண்டாவது இடம் வகிக்கிறது ஜப்பான். அங்கு சராசரி இன்டர்நெட் இணைப்பு வேகம் விநாடிக்கு 7.9 மெகாபைட்ஸ். சீனப் பகுதியான ஹாங்காங்கில் விநாடிக்கு 7.6 மெகாபைட்ஸ் வேகத்துடன் இன்டர்நெட் சேவை கிடைக்கி றது. அதன்மூலம் ஹாங்காங் மூன்றாம் இடத்தில் உள்ளது.
பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் அதிகமுள்ள மற்ற நாடுகள் பட்டியலும் ஆய்வில் வெளியிடப்பட்டது. ரோமானியா, சுவீடன், அயர்லாந்து, ஹாலந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், செக் குடியரசு ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் அமெரிக்கா 18வது இடத்தில் உள்ளது.

பேசும் படம்


குஜராத்தில் இந்த ஆண்டு மிளகாய் சாகுபடி அமோகமாக உள்ளது. அகமதாபாத்தை அடுத்த ஷெர்தா கிராமத்தில் மிளகாய்களை தரம் பிரிக்கும் பணியில் "குழந்தை தொழிலாளர்கள்"