லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.
இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.
சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.
இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
நன்றி :
savukku.net