மக்கள் உரிமை படியுங்கள்

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, December 21, 2010

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..

தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை
போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த
ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி,உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு,நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுகோளாறுகள்,மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:


தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத
வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை.நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு,பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும்.தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான
நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன்
விலை மலிவாக கிடைக்கும்.

Saturday, November 20, 2010

சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் மாதுளைச் சாறு: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


லண்டன்: மாதுளம்பழச் சாறுக்கு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாதுளம் பழம் உடல் நலனுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் மாதுளைச் சாறு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்த்துப் போராடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சீறு நீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மாதுளைச் சாறு கொடுத்தனர். இதில் அவர்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டைக் கண்டறிந்தனர்.மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ஸ் தான் இதற்கு காரணம்.
டயாலிசிஸ் செய்யும் முன் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு மாதுளம்பழச் சாறு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த நூற்றாண்டில் சிறு நீரகக் கோளாறு அதிக அளவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியைமறுபடியும் மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர் டாக்டர் பாட்யா கிரிஸ்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், கருத்தரிப்புத் திறனை அதிகரிக்கும், வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

Tuesday, September 21, 2010

கூந்தல் / முடி உதிர்வதை தடுக்க…

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…

வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.

எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பசும்பால்:
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பூண்டு:
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.

சீரகம்:
சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.

தேங்காய் பால்:

தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Tuesday, July 13, 2010

சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் !!!


சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான்.பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.அதன் பெயர் ஸ்டீவியா.அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.

1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.

1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.

ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும்.ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது. ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது.இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sunday, June 27, 2010

"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"


அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன்.

"இதயத்தை பாதுகாக்க யோசனைகள்"

***********

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

Tuesday, June 1, 2010

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!



கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும்,அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான 'omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.தாய், சிசுவின் உடலில் 'omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Thursday, March 11, 2010

பப்பாளி இலைச் சாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது


உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக்கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்க¬லைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.புளோரிடா பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் நாம் தாங் மற்றும் ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதிய¤யல் பொருள்கள் புற்றுக்கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு அதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.

ஏற்கெனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ், மார்புப் புற்று, ஈரல் புற்று, நுரையீரல் புற்று, கணையப்புற்று போன்ற 10 வகை புற்றுக்கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடிநீரைச் செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய்க்கட்டிகன் வளர்ச்சி குறைந்ததை அறிந்தனர். எவ்வளவு வடி நீர் அதிகமாக ஒரு புற்றுக்கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்றுகட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது.
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக்கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக்கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலைவடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.