மக்கள் உரிமை படியுங்கள்

Saturday, February 27, 2010

வங்க தேசத்தில் பரிதாபம்


மேற்குவங்க மாநிலத்தில் ஸ்வெட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் கருகி பலியானார்கள்.மேற்குவங்க மாநில தலைநகர் தாகாவில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள காசிப்பூரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு 3,500 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். நேற்று முன்தினம் பகல் நேர பணி முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். 50 பேர் மட்டும் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு 9.10 மணி அளவில் தொழிற்சாலையின் முதல் மாடியில் தீப்பிடித்துக் கொண்டது. அது ‘மளமள‘ வென்று மற்ற மாடிகளுக்கும் பரவியது.

பணியில் இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக 6&வது 7&வது மாடிகளுக்கு ஓடினார்கள். பலர் 2&வது 3&வது மாடிகளில் சிக்கி கொண்டார்கள். தகவல் அறிந்து 7 தீயணைப்பு வண்டிகளும் 3 ஆம்புலன்சுகளும் விரைந்து வந்தன. தீயில் கருகி காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். அவர்களில் 15 பெண்கள் உட்பட 21 பேர் இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொழிற்சாலையிலும் மருத்துவ மனைகளிலும் திரண்டு நின்று கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.மின்சார கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!


ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதை முழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.

மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.