மக்கள் உரிமை படியுங்கள்

Tuesday, March 9, 2010

செக்ஸ் சாமியார் நித்யானந்தா பெண்களை கட்டியணைத்து ஆசிர்வதிப்பது ஏன்?


நித்யானந்தம் நிகழ்ச்சி நடத்தும் போது அதில் முன்வரிசையில் நடிகைகள், முக்கிய விஐபிக்களின் மனைவிகள், அவர்களது மகள்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆசிரம நிர்வாகிகளிடம் முன் அனுமதி பெற்று, அனுமதி சீட்டு பெற வேண்டும். அந்த சீட்டையும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

உபதேசம் முடிந்ததும், பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் நித்யானந்தா. அப்போது, ஆசி பெறும் பெண்களை தேர்வு செய்வார். அவர்களை கட்டிப் பிடித்து ஆசிர்வதிப்பார். அப்போது அந்த பெண்களின் மனநிலை எப்படி உள்ளது, கூச்சப்படுகிறார்களா, சாதாரணமாக உள்ளார்களா என்பதை வீடியோவில் பார்ப்பார். பின்னர் நிர்வாகிகள் மூலம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு பிரச்னை இருப்பதை கட்டிப் பிடிக்கும் போது பார்ப்பேன். அடிக்கடி தியானத்துக்கு வந்தால், பிரச்னைகள் தீரும் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு பல முக்கிய பெண்களுக்கு வலை விரித்துள்ளார். பெண்கள் அவரது அறைக்கு சென்று ஆசீர்வாதம் வாங்கும்போது யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். இது அவருக்கு வசதியாகி விட்டது. அப்போது பெண்களின் மனதை தெரிந்து கொண்டு தன் வலையில் வீழ்த்தி வந்தார். இவரது வலையில் பல நடிகைகளும் வீழ்ந்துள்ளனர். அவர்களிடம் நித்யானந்தா பணம் பறித்தாரா அல்லது அவர்கள் நித்யானந்தத்திடம் பணம் பறித்தார்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

சென்னையில் உள்ள சில நடிகைகள் தொடர்பு பற்றியும், ஆசிரமத்துக்கு வந்த நன்கொடைகள் மற்றும் அதை அவர் முறையாக பயன்படுத்தினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. வருமான வரித் துறைக்கு முறையான தகவல்களை அளித்துள்ளாரா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். அதில் தவறு நடந்திருந்தால் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருடைய இருப்பிடத்தை கண்டறிய பல மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பற்றிய தகவல் தெரிய வந்தால் கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் குறித்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டாலும், நாங்களும் விசாரணை நடத்தி அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்போம்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.