மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, March 11, 2010

பப்பாளி இலைச் சாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது


உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக்கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்க¬லைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.புளோரிடா பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் நாம் தாங் மற்றும் ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதிய¤யல் பொருள்கள் புற்றுக்கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு அதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.

ஏற்கெனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ், மார்புப் புற்று, ஈரல் புற்று, நுரையீரல் புற்று, கணையப்புற்று போன்ற 10 வகை புற்றுக்கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடிநீரைச் செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய்க்கட்டிகன் வளர்ச்சி குறைந்ததை அறிந்தனர். எவ்வளவு வடி நீர் அதிகமாக ஒரு புற்றுக்கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்றுகட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது.
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக்கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக்கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலைவடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

சிறந்த நினைவு பரிசாம் பாண்டா கரடி சாணிக்கு ஆஸ்திரேலியாவில் மவுசு...??


ஆஸ்திரேலியாவில் பாண்டா கரடிகளின் சாணியை நினைவுப் பரிசாக வைத்திருப்பதை பலர் பெருமையாக கருதுகின்றனர். எனவே, 200 கடைகளில் விற்பனை தூள் பறக்கிறது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வனவிலங்கு பூங்கா உள்ளது. அங்கு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 பாண்டா கரடிகள் உள்ளன. பெயர் வாங் வாங், ப்யூனி. அவற்றுக்கு சீனாவில் இருந்து சிறப்பு மூங்கில் இலைகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு உணவாக தரப்படுகின்றன.

இந்த பாண்டா கரடிகளைக் காண அடிலெய்டு மக்களும், ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து உணவு வரவழைக்கப்படும் பாண்டா கரடிகளின் சாணியை பெற்று நினைவுப் பரிசாக சிலர் வைத்துக் கொள்ளத் தொடங்கினர்.அதற்கு மவுசு அதிகரித்து விட்டது. இப்போது பாண்டாவின் ‘டூ பாத்ரூமை’ கேட்டு ஆயிரக்கணக்கானோர் அடிலெய்டு வனவிலங்கு பூங்காவுக்கு படையெடுக்கின்றனர்.

இதுபற்றி பூங்கா செயல் அதிகாரி கிறிஸ் வெஸ்ட் கூறுகையில், “பாண்டா கரடிகளின் கழிவுகளை பாக்கெட் செய்து விற்கிறோம்.இதற்காக அடிலெய்டு நகரில் 200 விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் கிடைக்கும் வருமானமே, சீனாவில் இருந்து உயர்ரக மூங்கில் இலைகளை வரவழைத்து கரடிகளுக்கு உணவாக அளிக்க உதவுகிறது” என்றார்.

என்ன கொடுமை சார் இது....!!

எம்.பி. பதவியை இழந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம்..

மாநிலங்களவையில் இருந்து இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு எம்.பி.க்களில் கமல் அக்தர் (சமாஜ்வாடி) இஜாஜ் அலி (கட்சி சாராதவர்) ஆகிய இருவரும் நேற்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நிருபர்களிடம் அக்தர் கூறியதாவது:

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்காகவே நாங்கள் சபையில் குரல் கொடுத்தோம். இதற்காக நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எம்.பி. பதவியை இழந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்கள் கருத்தை சபையில் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு. உண்மையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் பெண்களிடம் இந்த அரசாங்கம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்திடம் இருந்து தான் வந்தது. சபைத் தலைவரிடம் இருந்து வரவில்லை. இது அரசாங்கத்தின் சர்வாதிகாரம். எங்களை பலவந்தமாக வெளியேற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இஜாஸ் அலி கூறுகையில், ‘‘சபைக் காவலர்களை வைத்து எங்களை வெளியேற்றிதற்காக இந்த அரசாங்கம் தான் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அவர்கள் தவறான மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அதை தடுத்த காரணத்திற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்ப்பதில் காங்கிரஸ், பா.ஜ, இடதுசாரிகள் ஒன்று சேர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.