மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, March 11, 2010

சிறந்த நினைவு பரிசாம் பாண்டா கரடி சாணிக்கு ஆஸ்திரேலியாவில் மவுசு...??


ஆஸ்திரேலியாவில் பாண்டா கரடிகளின் சாணியை நினைவுப் பரிசாக வைத்திருப்பதை பலர் பெருமையாக கருதுகின்றனர். எனவே, 200 கடைகளில் விற்பனை தூள் பறக்கிறது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வனவிலங்கு பூங்கா உள்ளது. அங்கு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 பாண்டா கரடிகள் உள்ளன. பெயர் வாங் வாங், ப்யூனி. அவற்றுக்கு சீனாவில் இருந்து சிறப்பு மூங்கில் இலைகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு உணவாக தரப்படுகின்றன.

இந்த பாண்டா கரடிகளைக் காண அடிலெய்டு மக்களும், ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து உணவு வரவழைக்கப்படும் பாண்டா கரடிகளின் சாணியை பெற்று நினைவுப் பரிசாக சிலர் வைத்துக் கொள்ளத் தொடங்கினர்.அதற்கு மவுசு அதிகரித்து விட்டது. இப்போது பாண்டாவின் ‘டூ பாத்ரூமை’ கேட்டு ஆயிரக்கணக்கானோர் அடிலெய்டு வனவிலங்கு பூங்காவுக்கு படையெடுக்கின்றனர்.

இதுபற்றி பூங்கா செயல் அதிகாரி கிறிஸ் வெஸ்ட் கூறுகையில், “பாண்டா கரடிகளின் கழிவுகளை பாக்கெட் செய்து விற்கிறோம்.இதற்காக அடிலெய்டு நகரில் 200 விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் கிடைக்கும் வருமானமே, சீனாவில் இருந்து உயர்ரக மூங்கில் இலைகளை வரவழைத்து கரடிகளுக்கு உணவாக அளிக்க உதவுகிறது” என்றார்.

என்ன கொடுமை சார் இது....!!

No comments: