மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, June 9, 2010

மீண்டும் பன்றி காய்ச்சல்: மும்பையில் 3 பேர், கேரளாவில் ஒருவர் பலி: பலர் பாதிப்பு


மும்பை& கொல்லம்: மும்பையிலும் கொல்லத்தில் பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) பரவியுள்ளது. இதனால் 4 பேர் பலியாகியுள்ளனர்.கொல்லத்தில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணு, பிந்து, நசீம் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.

கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமானோர் பரிசேதனைக்காக அரசு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.
அதே போல மகாராஷ்டிரத்திலும் ஸ்வைன் ப்ளூ பரவி வருகிறது. கடந்த 16 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மும்பையில் 27 வயதான கர்ப்பிணியும், ஒரு வயது குழந்தையும், 25 வயது பெண்ணும் பலியாகியுள்ளனர்.கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஸ்வைன் ப்ளூ தாக்குதல் தொடங்கியுள்ளது.

" யா அல்லாஹ் இக்கொடிய நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றுவாயாக"

போபால் விஷ வாயு-ஆன்டர்சனை தப்பவிட்ட நரசிம்ம ராவ் அரசு: மாஜி சிபிஐ அதிகாரி


மறைந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது அப்போதைய வெளியுறவு அமைச்சகம்தான், யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக அப்போது இருந்த வாரன் ஆன்டர்சன் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டாம் என தடை உத்தரவு போட்டது என்று முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.

இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் அரசுதான் ஆன்டர்சனை தப்ப விட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.போபால் விஷ வாயு சம்பவம் நடந்தவுடன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் கழித்து வெறும் ரூ. 25,000 ரொக்க ஜாமீனை செலுத்தி விடுதலையானார். பின்னர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை.

ஆன்டர்சனுக்கு சாதகமாக அப்போதைய நரசிம்ம ராவ் அரசு நடந்து கொண்டதாக தற்போது கூறியுள்ளார், அந்த சமயத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த லால். லால், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1995 ஜூலை வரை விசாரணை அதிகாரியாக இருந்தவர்.இதுகுறித்து லால் கூறுகையில், ஆன்டர்சன் குறித்து மெதுவாக போகுமாறு சிபிஐக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆன்டர்சன் நாடு கடத்தல் தொடர்பாக அழுத்தம் தரத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.

அரசின் இந்த உத்தரவு எனக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஆன்டர்சன்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. அவரை நாடு கடத்தக் கோருவதை வலியுறுத்த வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தலை எதிர்த்து நான் வெளியுறவு அமைச்சகம் எனக்கு அனுப்பிய எழுத்துப் பூர்வமான கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதையடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டேன்.இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்டர்சன் நாடு கடத்தப்பட்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சிபிஐயால் அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலை அப்போது. சிபிஐயால் ஆன்டர்சனை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அரசின் உத்தரவை மீறி சிபிஐயால் செயல்பட முடியாத நிலை இருந்தது.

பிற நாடுகளில் எல்லாம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ போன்றவை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சிபிஐ செயல்பட வேண்டியுள்ளது என்றார் லால்.முதலில் ஆன்டர்சன் உள்ளிட்ட 12 பேர் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் ஆன்டர்சன் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்துள்ளனர். மேலும், அவருக்கு சாதாராண சாலை விபத்துக்களின்போது போடப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மற்றவர்கள் மீதும் அதேபோன்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் வெறும் 2 வருட சிறைத் தண்டனை மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போபால் தீர்ப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள பாதிக்கப்பட்டோரும், இவர்களுக்காக போராடி வருவோரும், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளனர். ஆன்டர்சன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

காஸாவுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு

இஸ்ரேலின் முற்றுகையால் பசி,பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்றி வாழும் காஸ்ஸா
மக்களுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களை ஈவு இரக்கமற்ற இஸ்ரேலிய அரசு தனது
இராணுவ நடவடிக்கையின் மூலம் தடுத்து வருகிறது.

சமீபத்தில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'ஃப்ளோடில்லா' கப்பல்களில்
அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய இராணுவம் 9சமூகசேவகர்களைக் கொன்றொழித்தது.
கடந்த சனிக்கிழமை இன்னொரு உதவிக் கப்பலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையொட்டி காஸ்ஸாவுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்க ஈரானியப் புரட்சிப் படை முன்வந்துள்ளது.

ஈரானின் உச்ச மார்க்கத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமினியின் உதவியாளர் அலி
ஷராஸி இதனைத் தெரிவித்தார். "ஈரானின் கப்பற்படை அமைதியை நாடி, உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காஸ்ஸாவுக்குச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும்;"ஈரான் கப்பற்படையிலிருந்து இந்தப் புரட்சிப்படை தனியாக
உருவாக்கப்பட்டுள்ளது.ஆயத்துல்லாஹ் அலி காமினி உத்தரவிட்டால் உடனே இந்தப்
புரட்சிப் படை களத்தில் இறங்கிவிடும்.காஸ்ஸாவின் அப்பாவி மக்களைக் காப்பது
ஈரானின் கடமை" என்று அலி ஷராஸி மேலும் கூறினார்.

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்



இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற இஸ்ரேல் கடற்படை தாக்கியது. இந்த கப்பல்களில் பயணம் செய்த 19 அமைதி போராளிகள் உயிர் இழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஆறு கப்பல்களைக் கொண்ட இந்த விடுதலை கப்பல் குழுமத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 700 அமைதியாளர்கள் பயணித்தனர். பாலஸ்தீனத்தின் ஆதராவளர்கள், நோபிள் பரிசு பெற்றவர்கள், பல்வேறு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கப்பல்களில் பயணித்தனர். காஸா மீது இஸ்ரேல் போட்டுள்ள தடையை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் குழு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சைப்பிரஸில் உள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து கடந்த ஞாயிறு (மே 30) புறப்பட்ட இந்த கப்பல் குழுமம் மறுநாள் பாலஸ்தீனத்தை அடைய இருந்தது.விடுதலை கப்பல் குழுமம் என்று பெயரிடப்பட்ட இந்த படகுகளை திங்கள் காலை பன்னாட்டு கடல் பகுதியில் இஸ்ரேல் கடற்படை மறித்து தாக்கியது. காஸா கரைக்கு 65 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.இந்த தாக்குதல் இஸ்ரேலின் கடல் எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்றதை இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. ஆனால் தங்கள் தற்காப்பிற்காக இந்த நடவடிக்கையில் இறங்கியதாக இஸ்ரேல் கூறிக் கொண்டது.

கப்பல் குழுமத்திற்கு தலைமை தாங்கிய மார்வி மார்மரா என்ற கப்பலில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஏறும் காட்சியும் மேலே ஹெலிகாப்டர் அவர்களுக்கு பாதுகாப்பாக பறக்கும் காட்சியையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மார்வி மார்மரா கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஜமால் எல்சாயல் இந்த நடவடிக்கையின் போது செயல்திறனுள்ள ஆயுதங்களை இஸ்ரேல் படையினர் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

கப்பலில் வந்தவர்கள் தங்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தாங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. ஆனால் தங்களை இடைமறித்த உடனேயே இஸ்ரேல் படையினர் சுடத் தொடங்கியதாக இந்த கப்பல் குழும பயணத்தை ஏற்பாடு செய்த காஸா விடுதலை இயக்கத்தினர் தெரிவித்தனர். கப்பலில் சரணடைகிறோம் என்பதற்கு அடையாளமாக வெள்ளை கொடி ஏற்றப்பட்டதாகவும் பயணிகள் யாரும் எவ்வித தாக்குதலிலும் இறங்கவில்லை என்று கப்பலில் பயணம் செய்த அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தனது செய்தியாளருடன் ஒலித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு வாயை மூடுங்கள் என்று ஹிப்ரூ மொழியில் குரல் எழுப்பபடுவதை கேட்டதாக அல்ஜஸீரா கூறியது.



கப்பல் குழுமத்தின் தலைக் கப்பலான மாவி மர்மராவின் தலைமை மாலுமியை முதலில் இஸ்ரேல் கடற்படை தொடர்பு கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறும் எங்கே செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த கப்பல் குழுமத்தின் இரு மருங்கிலும் இரு இஸ்ரேல் போர் கப்பல்கள் சற்று தொலைவில் பயணிக்கத் தொடங்கின.

இதன் பிறகு இரவில் மோதலை தவிர்ப்பதற்காக கப்பல் குழுமம் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தனது பாதையை மாற்றத் தொடங்கியது. அனைத்து பயணிகளுக்கும் உயிர்காக்கும் கவசத்தை அளித்து விட்டு அனைவரையும் கீழ் தளத்தில் இருக்குமாறு மாலுமிகள் கேட்டுக் கொண்டனர். இத்தனைக்கு பிறகும் இஸ்ரேல் அப்பாவி பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியது.காஸாவை நோக்கி புறப்பட்ட இந்த கப்பல்களில் 10 ஆயிரம் டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இருந்தன. இந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றும் அல்ஜஸீரா குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணம் செய்த இஸ்ரேலில் இயங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஷேக் ராயித் சாலாஹ் படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.
இஸ்ரேல் நடத்திய இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பலில் பயணித்து உயிர் இழந்தவர்களுக்காக மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுஷ்திக்கப்படும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.துருக்கி, ஸ்பெயின், கிரீஸ், டென்மார்க் மற்றும் சுவிடன் ஆகிய நாட்டு அரசுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலின் தூதரை அழைத்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

துருக்கியில் இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கப்பல் குழுமத்தை வழிமறித்து மன்னிக்க முடியாத குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது. இதன் விளைவை அது அனுபவிக்கும் என்று துருக்கியின் வெளிவிவகாரத் துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.லண்டன் மாநகரிலும் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேலின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியா வர்ணித்துள்ளார்.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தீர்ப்பு-! பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிப்பு!



26 ஆண்டுகளுக்குப் முன்பு போபாலில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.பல்லாண்டுகள் உருண்டோடிய பின்னரும் அவர்களுக்கு நிவா ரணங்களும் உதவிகளும் நியா யமான முறையில் கிடைக்கவில் லை. குற்றவாளிகள் தண்டிக் கப் படவில்லை.

இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 3 ஆம் தேதி 1984ல் நிகழ்ந்த அந்த துயரச்சம்பவத்தை யாரும் மறக்கத் தயாராக இல் லை. 85 வயதான மஹிந்தரா உள்பட 8 பேரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ, 304, 336, 337 மற்றும் 338ன் படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

1. யூனியன் கார்பைடு முன்னாள் சேர்மன் கேசப் மஹிந்தரா.
2. யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குனர் விஜய் கோ கலே.
3. துணைத்தலைவர் கிஷோர் குமார்.
4. மேலாளர் ஜே.முகுந்த்.
5. துணை மேலாளர் ஆர்பி.ராய் சவூத்ரி, (இறந்து விட்டார்).
6. தயாரிப்பு நிர்வாகி எஸ்.பி. சவுத்ரி.
7. திட்ட கண்காணிப்பாளர் & கே.வி.ஷெட்டி.
8. தயாரிப்பு உதவியாளர் & ஷகீல் குறைஷி.

உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி மோகன் பி.திவாரி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் யூனியன் கார்பைடு நிறுவனங்கள் அமெரிக் காவைச் சேர்ந்தவருமான வா ரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வெளி வந்தவுடன் நீதி தோற்று விட்ட தாகக் கூறி மக்கள் பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதா கவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரி வித்தனர்.

1984 டிசம்பர் 3&ம் தேதி யூனியன் கார்பைடு இண்டியா லிமிடெட் என்ற தொழிற்சாலையில் வெளி யான மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு வெளியாகி ஏறக்குறைய எட்டுலட்சம் மக்கள் இந்த விஷவாயுவை சுவாசித்தனர். 20,000 மக்கள் இந்த வாயுவை சுவாசித்து மாண்டனர். ஆனால் உண்மையில் உயிரிழப்புகள் இதை விட அதிகம் இருக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏமாற்றங்களும் ஏக்கங்களும் நிறைந்த போபால் விஷவாயு சம்பவத்தில் நீதி தாமதமானதைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களில் குதித்தனர்.இருப்பினும் நீதி தாமதிக்கப் பட்டதால் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.குறிப்பாக யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்சன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் வாரன் ஆண்டர்சனை இன்றுவரை இந்தியா கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 3008 ஆவ ணங்கள், 178 சாட்சிகள் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலும் வழக்கு நடைபெற்றும் நீதி கிடைக் காத காரணத்தால் மக்களின் போராட்டம் வெடித்தது.இந்த லெட்சணத்தில் குற்ற வாளிகளில் 7 பேர் பினையில் விடுதலையாகி நீதியை கேலிகூத் தாக்கியுள்ளனர். மக்களின் கோபம் போராட்டமாக வெடித்து உள்ளது.