மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, February 3, 2010

ஒளுச் செய்ய உதவி செய்யும் நவீன கருவி கண்டுபிடிப்பு.


முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒளுச் செய்ய அவர்களுக்கு உதவி செய்யும் நவீன கருவியொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தி ஒளுச் செய்ய இது உதவும் என்று இதைக் கண்டுபிடித்த மலேசிய நிறுவனம் AACE டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பச்சை நிற உபகரணத்தில் தொட்டியுடன் தானியங்கி உணர்விகள் (Automatic Sensors) உள்ளனவாம். மேலும், ஒளுவின் போது, குர்ஆனிலிருந்து பிரார்த்தனை வசனங்களையும் இது ஒலித்தவண்ணம் இருக்குமாம்.

"வருங்காலங்களில் நீர் வீணடிப்பைத் தடுப்பதும், நீரைச் சேமிப்பதும் இன்றியமையாததாக இருக்கும் இந்தக் கருவியின் மாதிரி செயற்பாட்டை கோலாலம்பூரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ஆறுமாத காலங்களில் சந்தைக்கு வர இருக்கும் இந்தக் கருவி தொடக்கத்தில் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் வரை விலை வைக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஹஜ்ஜின் போது, ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் ஒளுச் செய்ய, தினமும், சுமார் 50 இலட்சம் லிட்டர்கள் நீர் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த உபகரணத்தால் அதில் 40 இலட்சம் லிட்டரை, தினமும் மிச்சப்படுத்த முடியும்.

துபாய் விமானநிலையத்தில், விரைவில், இந்தக் கருவிகளை நிறுவ உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு இரான் கண்டனம்


ஏவுகணை தாக்குதலுக்கு எதிரான புதிய தற்காப்பு கட்டமைப்பு ஒன்றை வளைகுடா பிராந்தியத்தில் நிறுவுவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு இரான் கடுமையாக எதிர்பு தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் எதிர்ப்பு நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக இரானின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.

இரான் தனது அண்டை நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று இரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாடிஜானி அவர்கள் தெரிவித்தார்.

இரான் அல்லது வடகொரியா தயாரிக்கக்கூடும் என்று கருதப்படும் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுக ணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல ராக்கெட்டுகளை அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை பரிசோதித்தது.

சிகரெட் வெடித்ததில் 6 பற்கள் உடைந்தன..!!



இந்தோனேசியாவில் திடீரென சிகரெட் வெடித்ததில் அதைப் புகைத்தவரின் 6 பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா புறநகரான பெகாசியில் வசிப்பவர் ஆன்டே சுசான்டோ. வயது 31. சிகரெட் புகைத்தபடி பைக்கில் இவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சிகரெட் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அதில் ஆன்டேவின் வாயில் படுகாயம் ஏற்பட்டு 6 பற்கள் உடைந்தன. வாய்க்குள் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆன்டேவுக்கு வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனது பள்ளிப் பருவத்தில் இருந்து புகைத்து வந்தேன். இதுவரை இப்படி ஆனதில்லை. சிகரெட் வெடிக்கும் என எதிர்பார்க்க வில்லை. அந்த அதிர்ச்சியால் இனி புகைப்பதை நிறுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.
சிகரெட் வெடித்து படுகாயம் ஏற்படுத்தியதால் அதைத் தயாரித்த நோஜோரனோ புகையிலை நிறுவனம் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர ஆன்டேவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி அந்நிறுவன தரப்பில் கூறுகையில், ‘‘எங்கள் சிகரெட்டில் வெடிபொருள் ஏதும் கிடையாது. தவறுதலாக சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை’’ என்றனர்.