மக்கள் உரிமை படியுங்கள்

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, December 12, 2010

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??


ஆந்திராவை சேர்ந்த பெற்றோர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை சென்னையில் கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தனர்.ஆந்திரா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கிராமம் ஹாலம்பள்ளி. இந்த கிராமத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்பவர் ஷேக் குரான்(56). இவரது மனைவி சுபைதா பேகம்(40).

இவர்களது மகன் ஷேக் சபீர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஷேக் சபீர்(19) சென்னையில் இருப்பதை தெரிந்து வியாழக்கிழமை சென்னை வந்தனர். 12 ஆண்டுக்கு பின்பு மகனை சந்தித்தும் பேச முடியவில்லை. காரணம் பெற்றோருக்கு உருது, தெலுங்கு மொழிகள் மட்டுமே தெரியும். சபீருக்கு தமிழ் மட்டுமே புரியும். பின்னர் மொழி தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னார்கள்.

பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முத்தமிழன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலையில் மகனை ஒப்படைந்தனர்.இதுகுறித்து சபீர் கூறுகையில், ‘‘சின்ன வயதில் ஓடிவந்தது நன்றாக நினைவு இருக்கிறது. நண்பர்களுடன் ரயில் ஏறியதுதான் நினைவுக்கு வந்தது. பின்னர் ஒரு ஊரில் இறங்கினோம். கொஞ்ச நாட்கள் அங்கு இருந்தோம். நான் மட்டும் இன்னொரு ரயில் ஏறி 2000ம் ஆண்டு இங்கு வந்தேன். மற்றவர்கள் வரவில்லை. ரயில்வே போலீஸ் என்னை பிடித்து சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்தனர். அங்கு 9வது வரை படித்தேன்.

பின்னர் 2008ம ஆண்டு வெளியில் வந்து விட்டேன். கோயம்பேட்டில் வேலை செயும் போது உதவி இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து அழைத்து சென்றார். அங்கு தங்கியபடி ஐயப்பா என்டர்பிரைசசில் தோல் தொழில் பயிற்சி பெற்றேன். பின்னர் அங்கு வேலை செய்த மேற்பார்வையாளர் சுரேஷ், அவர்களது நண்பர்கள் பாமக பிரமுகர் ஆனந்த், அதிமுக பிரமுகர் வெங்கடேசன், அரிமா சங்கத்தினர் எனது பெற்றோரை கண்டுபிடித்தனர். என் பெற்றோர் கிடைக்க வேண்டும் என்று ஐயப்பனுக்கு மாலை போட்டேன். இன்று ஊருக்கு போகிறேன். 17ம் தேதி மொகரம் முடிந்ததும் சென்னை வருவேன். சபரிமலைக்கு 20ம்தேதி போகிறேன்’’ என்றார்.

சேஷக் குரான், சுபைதா பேகம் கூறுகையில், ‘‘எங்களுக்கு சபீர் 4வது பையன். அவனுக்கு 2 அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை இருக்கிறார்கள். அல்லாவின் அருளாலும், நல்லவர்கள் உதவியாலும் எங்கள் பையன் கிடைத்து விட்டான். அவன் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளது குறித்து எங்களுக்கு வெறுப்போ, வருத்தமோ இல்லை. அது அவன் விருப்பம். இப்போது அவன் கிடைத்த மகிழ்ச்சியே போதும். சபீர் இங்கேயே வேலை செய்யப் போகிறானாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எங்களை பார்க்க வருவானாம். எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து விட்டோம். ஆனால் இவன் 2 ஆண்டாவது எங்களுடன் முழுமையாக இருந்த பிறகுதான் கல்யாணம்’’ என்றனர்.

இவர்களை நினைத்து வேதனை படுவதா அல்லது சந்தோஷ படுவதா ??

Monday, November 29, 2010

பீகார் சட்டசபையில் முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 19 மட்டுமே..


பாட்னா: இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக ஒவ்வொரு கட்சியும் கடுமையாக போட்டி போட்ட போதிலும், பீகார் சட்டசபையில் வெறும் 19 முஸ்லீம் எம்.எல்.ஏக்களே இடம் பெற்றுள்ளனர்.பீகார் மாநிலத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 16.5 சதவீதமாகும், அதிகமாக இருக்ககூடிய வாய்ப்பு இருக்கிறது.. இதை ஒப்பிட்டுப் பார்த்தால் 50 எம்.எல்.ஏ-கள் இருக்க வேண்டும் , 19 என்பது மிக மிக குறைவாகும்.

இத்தனைக்கும் ஒவ்வொரு கட்சியும் நிறைய முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். ஆனால் ஜெயித்து வந்தவர்கள் வெறும் 19 பேர் மட்டுமே. இருப்பினும் கடந்த சட்டசபையில் 16 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 3 பேர் அதிகரித்துள்ளது ஓரளவு ஆறுதல் தருவதாக உள்ளது.இந்த 19 பேரில் ஏழு பேர் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 6 பேரும், காங்கிரஸுக்கு 3 பேரும், பாஸ்வான் கட்சிக்கு 2 பேரும், பாஜகவுக்கு ஒருவரும் கிடைத்துள்ளனர்.

முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பது அச்சமுதாயத்தினரிடையே பெரும் கவலை அலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம்களை பெருமளவில் வாக்களிக்க வைப்பதில் சமுதாயத் தலைவர்கள் அக்கறை காட்டுவதில்லை, அதனால்தான் முஸ்லீம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தேய்ந்து கொண்டே போவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒற்றுமையாக இருந்து வாக்களிப்பதன் அவசியத்தை முஸ்லீம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே முஸ்லீம்களின் வாக்குகள் சிதறாமல், வேறு வேட்பாளர்களுக்குப் போகாமல் முஸ்லீம் வேட்பாளர்கள் அதிகஅளவில் வெற்றி பெற வழி வகுக்கும் என்பது முஸ்லீம் சமுதாயத்தினரின் கருத்தாகும்.

இதுகுறித்து பாஸில் ராப் என்பவர் கூறுகையில், முஸ்லீம்களிடையே வாக்களிக்கும் சதவீதம் மிக மிக குறைவாக உள்ளது. அதுவே இந்த நிலைக்குக் காரணம். முஸ்லீம்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த முஸ்லீம் தலைவர்கள் தவறி விட்டனர். இது வருத்தத்திற்குரியது என்றார்.

புதிதாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இஸார் அகமது கூறுகையில், முஸ்லீம்கள் வாக்களிக்கும் சதவீதம் 30 முதல் 40 சதவீதமாகவே உள்ளது. இதுவே 50 அல்லது அதற்கு மேலாக இருந்திருந்தால் குறைந்தது 24 பேராவது கூடுதலாக தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள்.நடந்து முடிந்த தேர்தலில் 35 முஸ்லீம் வேட்பாளர்கள் 2வது இடத்தைப் பிடித்தனர். அவர்களில் பலர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக லாலு கட்சியின் பரஸ் பாத்மி என்பவர் வறும் 29 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்றார்.

கட்சிகளைப் பொறுத்தமட்டில் அதிக அளவிலான முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய கட்சி காங்கிரஸ்தான். மொத்தம் 48 பேரை அது நிறுத்தியிருந்தது. ஆனால் வென்றது 3 பேர்தான்.

லாலு கட்சி சார்பில் 28 பேரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் 15 பேரும் நிறுத்தப்பட்டனர். பாஸ்வான் கட்சி 12 பேருக்கு வாய்ப்பளித்தது. இதில் ஐக்கிய ஜனதாதளம் (3), காங்கிரஸ் (2), லாலு (1), பாஸ்வான் (1) ஆகிய கட்சிகள் மொத்தமாக 7 முஸ்லீம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

Sunday, November 21, 2010

அதிர வைக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு : இந்திய ஊழல் வரலாற்றில் புதிய சாதனை !!


இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.

சாதாரண மக்களும் திகைப்பு: "ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை, ஸ்வான், யுனிடெக், எஸ்.டெல்' என, மீடியாக்களில் அடிக்கடி கூறப்படுவதை, ஏதோ வேற்றுக் கிரக மக்கள் பேசும் மொழி யோ என, நினைத்து, இந்த விவகாரத்தை பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கூட, 1.76 லட்சம் கோடி ரூபாய் என, பேச்சு எழுந்ததுமே, ஒரு கணம் திகிலடித்து, அதிர்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியுள்ளனர். எங்கு முறைகேடு நடந்தது, எப்படி நடந்தது என்பது போன்ற விவகாரங்கள் எல்லாம் புரியவில்லை என்றாலும், மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொண்டுள்ளனர்.

ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் மூலம், இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயையும் யாருடைய பாக்கெட்டிற்கோ, போய் விட்டதாக அர்த்தம் இல்லை. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட, நிதி அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் கிடைக்காமல் போய் விட்டது என்பது தான், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் குற்றச்சாட்டு. தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, இந்த வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்றும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமங்கள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், யார், யார் லாபம் அடைந்தனரோ அவர்கள் தான் ஊழல் செய்தவர்கள். இதற்காக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவர்கள் எவ்வளவு லாபம் பெற்றனரோ, அந்த தொகை தான் ஊழல் தொகை. அது, சாதாரண தொகையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக கூற முடியும்.

மூன்று ஆண்டுக்கு முன்பே கசிந்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தாலும், மூன்று ஆண்டுக்கு முன்பே, இதுகுறித்து அரசல், புரசலாக மர்மங்கள் கசியத் துவங்கி விட்டன. போதிய இடைவெளிகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும்,அப்போது யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய விஷயங்கள் வெளியில் கசியத் துவங்கியதும் தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

பலமுனை தாக்குதல்: பா.ஜ., - இடதுசாரி கட்சிகள், அ.தி.முக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்தன. மறுபக்கம், மீடியாக்கள் அடிக்கடி இதுகுறித்த செய்திகளை வெளியிட்டவாறு இருந்தன. மற்றொரு பக்கம், தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக, தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை சமாளிப்பதற்காக சி.பி.ஐ., விசாரணை, பொது கணக்கு குழு ஆய்வு என, அரசு சார்பில் எவ்வளவோ சமாளிப்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.


மற்றொரு பக்கம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, "ராஜா விவகாரத்தில் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு தரத் தயார்' என, சமயம் பார்த்து அரசியல் காய் நகர்த்தினார். சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. அனைத்து பக்கங்களிலும் இருந்து வந்த பலமுனை தாக்குதலில் மத்திய அரசு நிலைகுலைந்து போனது. வேறு வழியில்லாமல், இறுதிக் கட்ட நடவடிக்கையாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ராஜாவுக்கு உத்தரவு வந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையை பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படி தான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை'என, அடம்பிடித்த ராஜா, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை: ராஜா ராஜினாமாவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என, நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாய், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையும் இதில் உருட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்தது என்? என, பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால், காங்கிரஸ் மேலிடம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் பதவியும் ஊசாலாடிக் கொண்டிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

தொலைத் தொடர்பு ஆணையத்தின் அதிரடி: இதுவரை மவுனம் காத்து வந்த தொலைத் தொடர்பு ஆணையமும் (டிராய்) தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2008ல் புதிதாக நுழைந்து, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 62 லைசென்சுகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. "டிராய்' அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவை நடத்துவதற்காக அனுமதி பெற்ற எடிசலாட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். யுனிடெக் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிநார் நிறுவனத்துக்கு எட்டு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஷியாம் குரூப்பிற்கு பத்து மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பத்து உரிமங்கள், லூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 19 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

டிராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.என்ன செய்யப் போகிறது சி.பி.ஐ., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து வாங்கிக் கொண்ட வெறுப்பில் இருக்கிறது சி.பி.ஐ., தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகி விட்டது. எனவே, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். முறைகேட்டுக்கு துணை நின்ற அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., வலைவிரிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : சி.ஏ.ஜி., அறிக்கை கூறுவது என்ன?

* கடந்த 2008ல் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 645 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

* ஏல முறைக்கு பதிலாக, முதலில் வருபவர்களுக்கே ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டுள்ளது.

* உரிமம் கோரிய 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதிய நிதி மூலதனத்தை பெற்றிருக்கவில்லை. இவற்றில் 45 நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் கோருவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை.

* சில நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

* மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு துறை (டிராய்) விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

* சில தனியார் நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்குவதிலும் வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை.

* உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. ஸ்வான் நிறுவனம், தனது 45 சதவீத பங்குகளை "எடிசலாட்'என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. யுனிடெக் நிறுவனம், தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

* உரிமம் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றதால், பெரிய அளவில் பயன் அடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

* உரிமம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.

* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

* அனுபவம் இல்லாத "ஸ்வான்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்க கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.

* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.

* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.

* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.

* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:

1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

2. சர்க்கரை ஊழல் 650 கோடி

3. போபர்ஸ் ஊழல் 65 கோடி

4. ஹவாலா ஊழல் 65 கோடி

5. எம்.பி., டிரேடிங் 32 கோடி

6. உர ஊழல் 133 கோடி

7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

8. இந்தியன் வங்கி 1,336 கோடி

9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

10. நில ஊழல் (பீகார்) 400 கோடி

11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.

13.ராணுவத்துக்கு சவப்பெட்டி வாங்கியதில் 40,000 கோடி ஊழல்...என்று நீண்டு கொண்டே போகுது....

என்று திருந்துவார்கள் இந்த அரசியல்வாதிகள் !!!

Saturday, October 9, 2010

மேற்கு வங்க முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு முதல்வர் புத்ததேவின் புதிய அறிவிப்பு!


மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் பல முக்கியத் தொகுதிகளில் குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர். மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 26 சதவிகிதமாகும்.

கடந்த நாடாளுன்றத் தேர்தலில் மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு
அதிக வாக்குகள் கிடைத்தது, முஸ்லிம்கள் பெருவாரியாக மம்தாவை ஆதரித்தும்,
கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்தும் வாக்களித்திருந்தார்கள்.இந்த தேர்தலுக்குப் பிறகுதான் முஸ்லிம்களுக்கான பிரச்னைகளின் பக்கம் கவனம் செலுத்தத் துவங் கியது புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மேற்கு வங்க
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்த கம்யூனிஸ்ட் கட்சி,
மற்ற கட்சிகளைப் போல அதனை வெறும் ஏமாற்று அறிவிப்பாக ஆக்காமல் சொன்னபடியே அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்துள்ளது.
ஏற்கனவே இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால்
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏழு சதவிகித ஒதுக்கீடு
அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேற்கு வங்க முஸ்லிம்களுக்கு கூடுதல்
இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்த புத்ததேவ் அரசு, இதற்கென முஸ்லிம்களில் ஒரு
பிரிவினருக்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதன்படி 10
சதவிகித கூடுதல் இடஒதுக்கீட்டை அளித்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 17 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

முதல்வர் புத்ததேவின் அறிவிப்பு மேற்கு வங்க முஸ்லிம்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக மேற்கு வங்க முஸ்லிம்களின் ஹஜ் பயணத் தேவைகளுக்காக ஹஜ் டவர் கட்ட இடம் ஒதுக்கித்தந்த புத்ததேவ் அரசு, அதனை பிரம்மாண்டமாகவும் கட்டி முடித்து அம்மாநில முஸ்லிம்களுக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.புத்ததேவ் அரசின் இந்த இட ஒதுக்கீடு நடவடிக்கையை எதிர்க்க முடியாமல் குமுறும் எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளின் பிடிதளர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் வேறு நடைபெறவுள்ளது.
ஆகவே சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த இட ஒதுக்கீட்டு
உயர்வு அறிவிக்கப்பட்டி ருப்பதாக விமர்சனம் செய்து வரு கின்றன. ஆனால் புத்ததேவ்
அரசு சமூக நீதியை காப்பாற்றி இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Thursday, September 2, 2010

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ்


'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.

2008 ஜனவரி 25-ம் தேதி, அன்று காலை வழக்கம்போல நாளிதழ்களை விரித்தபோது, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.முதல் நாள் இரவு 9 மணி அளவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திதான் அது! புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவிலும் வெடிகுண்டு வெடித்திருந்தது. உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் வகுப்பு முரண் உள்ள ஓர் ஊரில் இப்படியான ஒரு சம்பவம் கவலையை அளித்தது. முந்தைய ஆண்டில் அங்கே இப்படியான மோதலில் ஆறு கொலைகள் நடந்திருந்தன. வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தென்காசி சென்றிருந்த உண்மை அறியும் குழு ஒன்றில் பங்குபெற்றிருந்ததால், அங்கு உள்ள சூழலை நான் அறிவேன்.

எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்... ஆனால், 'அதற்காக இப்படிச் செய்யலாமா?' என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் 'அபினவ பாரதம்' என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் 'காவி பயங்கரவாதம்' என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள்,ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி.இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003),ஜல்னா (2004),புர்னா(2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.

ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் 'சிமி' என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.

கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள 'பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்' பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று - ஆர்.எஸ்.எஸ்!

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மையிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!

'மென்மை இந்துத்துவா' என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!


- அ.மார்க்ஸ்

Saturday, July 24, 2010

போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குற்றவாளி குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா


அகமதாபாத்: சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரை போலி என்கெளண்ட்டரில் கொலை செய்ததாக சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கொலைகளுக்கு சாட்சியான பிரஜாபதியையும் அமித் ஷா போலீசாரை வைத்து போலி என்கெளண்டர் நடத்தி கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மன்களையடுத்து அமித் ஷா தலைமறைவானார். இதையடுத்து அவரைக் கைது செய்ய சிபிஐ தனிப் படைகளை அமைத்தது. அவரது அரசு அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வலது கரமான இவர் மீது ஆள் கடத்தல்,கொலைகள்,கொலைச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மலிவு விலை லேப்டாப் ரூ.1500 மட்டுமே


மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டு முதல் இது விற்பனைக்கு வரும்.புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல் இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இதுபோன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீ போர்டு, 2 ஜி.பி.ராம் மெமரி,வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும் என கபில் சிபல் தெரிவித்தார்.ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது.விரைவில் விலை ரூ.1000 ஆகக் குறைந்து,ரூ.500க்கு விற்பனை செய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Monday, July 19, 2010

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்


நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர். இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.

'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.

கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.

அமர்வு - 1

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)

கருத்துரை:

வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)

'தலித் முரசு' புனித பாண்டியன்

அமர்வு - 2

"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927

கீற்று.காம் - பயணமும், இலக்கும்

கருத்துரை:

சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி

அனைவரும் வருக

- கீற்று ஆசிரியர் குழு

தொடர்புக்கு: 99400 97994

---
நன்றி : கீற்று.காம்

Thursday, July 15, 2010

இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது


டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து உறுதியில், ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்ருக் கொண்டுள்ளது.தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ரூபாய்க்கான சின்னத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது.

புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது.

6 மாதத்தில் நடைமுறைக்கு வரும் ரூபாய்க்கான சின்னத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்னும் 6 மாதங்களில் இந்த குறியீடு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Sunday, July 11, 2010

மக்கள் தொகை... 2050-ல் சீனாவை விஞ்சும் இந்தியா !


கடந்த 100 ஆண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ள இந்திய மக்கள் தொகை, 2050-ல் சீனாவை விஞ்சும் என்று அரசு கணித்துள்ளது.இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்பான அரசின் ஆய்வறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கத்தின் சதவீதம் 0.6 மட்டுமே என்பது கவனத்துக்குரியது.கடந்த 2009-ல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 119.8 கோடி. அப்போது, சீனாவின் மக்கள் தொகை 134.5 கோடி.பாகிஸ்தானின் மக்கள் தொகை 18 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.2 ஆக இருந்திருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை 2050வது ஆண்டில் 161.38 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், சீனாவின் மக்கள் தொகை 141.7 கோடியை அடைந்திருக்கும்.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 'ஜனசக்திய ஸ்திர்தா கோஷ்' ஆய்வறிக்கையின்படி, இப்போது காணப்படுகின்ற வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகக் கூடும் என்று தெரிகிறது.

Saturday, July 10, 2010

இன்சாட்-4பி செயற்கை கோளில் மின்சார கோளாறு: டிவி- தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு


இன்சாட்-4பி செயற்கைக் கோளுக்கு மின் சக்தி வழங்கும் சோலார் பேனல்களில் ஒன்று பழுதாகி விட்டதால், இந்தியாவில் சில டி.வி. சேனல்களின் ஒளிபரப்பும், சில தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு மற்றும் டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்காக பல்வேறு டிரான்ஸ்பான்டர்களுடன் கூடிய இன்சாட்-4பி செயற்கைக் கோள் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த இந்த 3 டன் எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதில், 'க்யூ-பேண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் 12, 'சி-பேண்ட்'டிரான்ஸ்பாண்டர்கள் 12 என மொத்தம் 24 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.இந்த செயற்கைக் கோளுக்கான மின் சக்தியை வழங்க, இரண்டு சோலார் பேனல்கள் உள்ளன. இவை சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றித் தருகின்றன.

இதில் ஒரு பேனலில் இருந்து மின்சாரம் உற்பத்தியாவது கடந்த 7ம் தேதி முதல் பாதிக்கப்பட்டது. இதனால், இன்சாட்-4பி செயற்கைக் கோளின் சக்தியானது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.இதனால் இப்போது 12 டிரான்ஸ்பாண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதன்காரணமாக இந்த செயற்கைக் கோளை நம்பியிருந்த சேவைகள 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சில டி.வி. சேனல்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இன்சாட் ரக செயற்கைக் கோள்களில் மின்சாரப் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை இந்த வகையான கோளாறுகள் ஏற்பட்டு, அவை பயனற்றுப் போயுள்ளன.

வேலூர் வி.ஐ.டி. மாணவர்கள் ஏவிய ராக்கெட்:

இதற்கிடையே வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ரோஹினி-200 (ஆர்.எச்) என்ற ராக்கெட் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட 2 நிமிடத்தில் ராக்கெட் 60 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியது.இந்த ராக்கெட்டில் வளிமண்டல ஆய்வு குறித்த கருவிகள் இடம் பெற்றிருந்தன. ராக்கெட் தயாரிப்பதற்கான முழு செலவையும் வி.ஐ.டி.பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 30, 2010

அமெரிக்கா போல் இந்தியாவிலும் புகைப்பட அடையாள அட்டை மற்றும் அடையாள எண் வழங்கபடுகிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். கணக்கெடுப் பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில், கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, "டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.

கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர். கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Sunday, June 13, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை..


வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.

படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகிடுங்க !

Wednesday, June 9, 2010

மீண்டும் பன்றி காய்ச்சல்: மும்பையில் 3 பேர், கேரளாவில் ஒருவர் பலி: பலர் பாதிப்பு


மும்பை& கொல்லம்: மும்பையிலும் கொல்லத்தில் பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) பரவியுள்ளது. இதனால் 4 பேர் பலியாகியுள்ளனர்.கொல்லத்தில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணு, பிந்து, நசீம் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.

கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமானோர் பரிசேதனைக்காக அரசு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.
அதே போல மகாராஷ்டிரத்திலும் ஸ்வைன் ப்ளூ பரவி வருகிறது. கடந்த 16 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மும்பையில் 27 வயதான கர்ப்பிணியும், ஒரு வயது குழந்தையும், 25 வயது பெண்ணும் பலியாகியுள்ளனர்.கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஸ்வைன் ப்ளூ தாக்குதல் தொடங்கியுள்ளது.

" யா அல்லாஹ் இக்கொடிய நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றுவாயாக"

போபால் விஷ வாயு-ஆன்டர்சனை தப்பவிட்ட நரசிம்ம ராவ் அரசு: மாஜி சிபிஐ அதிகாரி


மறைந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது அப்போதைய வெளியுறவு அமைச்சகம்தான், யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக அப்போது இருந்த வாரன் ஆன்டர்சன் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டாம் என தடை உத்தரவு போட்டது என்று முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.

இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் அரசுதான் ஆன்டர்சனை தப்ப விட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.போபால் விஷ வாயு சம்பவம் நடந்தவுடன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் கழித்து வெறும் ரூ. 25,000 ரொக்க ஜாமீனை செலுத்தி விடுதலையானார். பின்னர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை.

ஆன்டர்சனுக்கு சாதகமாக அப்போதைய நரசிம்ம ராவ் அரசு நடந்து கொண்டதாக தற்போது கூறியுள்ளார், அந்த சமயத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த லால். லால், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1995 ஜூலை வரை விசாரணை அதிகாரியாக இருந்தவர்.இதுகுறித்து லால் கூறுகையில், ஆன்டர்சன் குறித்து மெதுவாக போகுமாறு சிபிஐக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆன்டர்சன் நாடு கடத்தல் தொடர்பாக அழுத்தம் தரத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.

அரசின் இந்த உத்தரவு எனக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஆன்டர்சன்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. அவரை நாடு கடத்தக் கோருவதை வலியுறுத்த வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தலை எதிர்த்து நான் வெளியுறவு அமைச்சகம் எனக்கு அனுப்பிய எழுத்துப் பூர்வமான கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதையடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டேன்.இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்டர்சன் நாடு கடத்தப்பட்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சிபிஐயால் அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலை அப்போது. சிபிஐயால் ஆன்டர்சனை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அரசின் உத்தரவை மீறி சிபிஐயால் செயல்பட முடியாத நிலை இருந்தது.

பிற நாடுகளில் எல்லாம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ போன்றவை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சிபிஐ செயல்பட வேண்டியுள்ளது என்றார் லால்.முதலில் ஆன்டர்சன் உள்ளிட்ட 12 பேர் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் ஆன்டர்சன் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்துள்ளனர். மேலும், அவருக்கு சாதாராண சாலை விபத்துக்களின்போது போடப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மற்றவர்கள் மீதும் அதேபோன்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் வெறும் 2 வருட சிறைத் தண்டனை மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போபால் தீர்ப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள பாதிக்கப்பட்டோரும், இவர்களுக்காக போராடி வருவோரும், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளனர். ஆன்டர்சன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தீர்ப்பு-! பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிப்பு!



26 ஆண்டுகளுக்குப் முன்பு போபாலில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.பல்லாண்டுகள் உருண்டோடிய பின்னரும் அவர்களுக்கு நிவா ரணங்களும் உதவிகளும் நியா யமான முறையில் கிடைக்கவில் லை. குற்றவாளிகள் தண்டிக் கப் படவில்லை.

இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 3 ஆம் தேதி 1984ல் நிகழ்ந்த அந்த துயரச்சம்பவத்தை யாரும் மறக்கத் தயாராக இல் லை. 85 வயதான மஹிந்தரா உள்பட 8 பேரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ, 304, 336, 337 மற்றும் 338ன் படி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

1. யூனியன் கார்பைடு முன்னாள் சேர்மன் கேசப் மஹிந்தரா.
2. யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குனர் விஜய் கோ கலே.
3. துணைத்தலைவர் கிஷோர் குமார்.
4. மேலாளர் ஜே.முகுந்த்.
5. துணை மேலாளர் ஆர்பி.ராய் சவூத்ரி, (இறந்து விட்டார்).
6. தயாரிப்பு நிர்வாகி எஸ்.பி. சவுத்ரி.
7. திட்ட கண்காணிப்பாளர் & கே.வி.ஷெட்டி.
8. தயாரிப்பு உதவியாளர் & ஷகீல் குறைஷி.

உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி மோகன் பி.திவாரி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் யூனியன் கார்பைடு நிறுவனங்கள் அமெரிக் காவைச் சேர்ந்தவருமான வா ரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வெளி வந்தவுடன் நீதி தோற்று விட்ட தாகக் கூறி மக்கள் பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதா கவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரி வித்தனர்.

1984 டிசம்பர் 3&ம் தேதி யூனியன் கார்பைடு இண்டியா லிமிடெட் என்ற தொழிற்சாலையில் வெளி யான மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு வெளியாகி ஏறக்குறைய எட்டுலட்சம் மக்கள் இந்த விஷவாயுவை சுவாசித்தனர். 20,000 மக்கள் இந்த வாயுவை சுவாசித்து மாண்டனர். ஆனால் உண்மையில் உயிரிழப்புகள் இதை விட அதிகம் இருக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏமாற்றங்களும் ஏக்கங்களும் நிறைந்த போபால் விஷவாயு சம்பவத்தில் நீதி தாமதமானதைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களில் குதித்தனர்.இருப்பினும் நீதி தாமதிக்கப் பட்டதால் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.குறிப்பாக யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்சன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் வாரன் ஆண்டர்சனை இன்றுவரை இந்தியா கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 3008 ஆவ ணங்கள், 178 சாட்சிகள் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலும் வழக்கு நடைபெற்றும் நீதி கிடைக் காத காரணத்தால் மக்களின் போராட்டம் வெடித்தது.இந்த லெட்சணத்தில் குற்ற வாளிகளில் 7 பேர் பினையில் விடுதலையாகி நீதியை கேலிகூத் தாக்கியுள்ளனர். மக்களின் கோபம் போராட்டமாக வெடித்து உள்ளது.

Sunday, May 23, 2010

மங்களூரில் நெஞ்சை உருக்கும் சோகம் விமான விபத்தில் 159 பேர் உயரிழந்த சம்பவம்


மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நெஞ்சை உருக்கும் மிகக் கோரமான விமான விபத்து ஏற்பட்டது. துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்&இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையை தாண்டி மலையில் மோதி வெடித்துச் சிதறியது. இதில், 19 குழந்தைகள் உட்பட 159 பேர் கருகி பலியாகினர். அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக கோரமான விமான விபத்து இது.

ஏர் & இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது போயிங் 737&800 விமானம். 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இது, நவீன தொழில்நுட்பங்களை கொண்டது. மங்களூர் & துபாய் இடையே பயணிகள் விமானமாக பறந்து கொண்டிருந்தது
வழக்கம்போல், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டது. அதில், 160 பயணிகள் இருந்தனர். 6 விமான ஊழியர்கள் இருந்தனர். நள்ளிரவை தாண்டி அதிகாலையில் விமானம் புறப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.

செர்பிய வம்சாவளியை சேர்ந்த விமானி ஜெட் குலுசிக் என்பவர் இந்த விமானத்தை இயக்கினார். இவர், 10,200 மணி நேரம் விமானத்தை ஓட்டிய பழுத்த அனுபவம் கொண்டவர். இவருக்கு உதவியாக இருந்தார் துணை பைலட் எச்.எஸ். அலுவாலியா. மங்களூரைச் சேர்ந்தவர். இவரும் 3,650 மணி நேரம் விமானத்தை ஓட்டிய அனுபவசாலி.
மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதற்காக 10 மைல் தொலைவில் வந்ததும், தரை இறக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினார் குலுசிக். மங்களூரை
நெருங்கி விட்டதை, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். 5.30 மணி அளவில் 4 மைல் தொலைவுக்கு விமானம் வந்து விட்டது. அப்போது, ‘வானிலை தெளிவாக இருக்கிறது. தரை இறங்கலாம்’ என்று கட்டுபாட்டு அறையில் இருந்து அனுமதி கொடுக்கப்பட்டது. உடனே, பயணிகளை உஷார்படுத்தினார் குலுசிகா, சீட் பெல்ட்டை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

மங்களூரில் சில நாட்களாக மழை பெய்தாலும், நேற்று காலை வானிலை நன்றாகவே இருந்தது. மெல்லிய தூறல் மட்டும் ஜில்லென்று அடித்துக் கொண்டு இருந்தது. விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் உயரத்தை குலுசிகா குறைக்கத் தொடங்கினார். காலை 6.28க்கு ஓடுபாதையை நோக்கி விமானத்தை இறக்கினார். அப்போது, ஓடுபாதையை விட்டு விமானம் சற்று விலகி இருப்பதை கண்டதும் பதற்றம் அடைந்தார்.

அதே மனநிலையில் விமானத்தை இறக்கினார். அப்போது, எதிர்பாராத சம்பவம் நடந்தது. விமானத்தின் டயர்கள் ஓடுபாதையை தொடவில்லை. அதற்கு பதிலாக, அதன் வயிற்றுப் பகுதி தரையில் தட்டி பயங்கர சத்தம் ஏற்பட்டது. விமானத்தின் பின்பக்க டயர்கள் வெடித்தன. அந்த அதிர்ச்சியில் விமானம் வேகமாக குலுங்கியது. மரண பீதியில் பயணிகள் அலறினர். குலுசிகாவும், அலுவாலியாவும் விபரீதத்தை உணர்ந்தனர். விமானத்தை இப்படியே இயக்கினால், அடுத்த சில நூறு அடி தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கும் என்பதை அறிந்தனர்.அதை தவிர்ப்பதற்கான மின்னல் வேகத்தில் செயல்பட்டார் குலுசிகா. விமானத்தை அப்படியே மேலே கிளப்பினார். அங்கும் விதி விளையாடியது. சில அடி உயரத்துக்கு விமானம் உயர்ந்தபோது, அங்கிருந்த ஆண்டனாவில் அதன் இறக்கை உரசியது. அவ்வளவுதான் விமானத்தின் போக்கு மாறியது. குலுசிகா கட்டுப்பாட்டை இழந்தார். அருகில் இருந்த கட்டிடத்தின் மீது உரசிய விமானம், பள்ளத்தாக்கில் பந்து போல் பறந்து சென்று விழுந்தது.

அந்த வேகத்தில் விமானம் துண்டாக உடைந்தது. எரிபொருள் டாங்க்கில் தீ பிடித்தது. அதன் ஜுவாலைகள் வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்து கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த 10 நிமிடங்களில் வெடிகுண்டு வைத்தது போல் விமானம் வெடித்தது. அதில் இருந்த பயணிகளை தீ கவ்வியது. உயிருடன் எரிந்த அவர்களின் மரண ஓலம், அந்த பள்ளத்தாக்கை அதிர வைத்தது. பள்ளத்தாக்கில் விழுந்து விமானம் உடைந்தபோது 8 பயணிகள் கீழே குதித்து தப்பினர்.

அருகில் வசிக்கும் மக்கள் விபத்து இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. மீட்டு பணிகள் தொடங்கின. ஆனால், அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. விமானத்தில் கருகிய உடல்கள் கரிக்கட்டைகளாக குவிந்து கிடந்தன. பலர் சீல் பெல்ட் போட்டு இருந்ததால், இருக்கையிலேயே கருகிக் கிடந்தனர்.இந்த விபத்தில் 6 விமான ஊழியர்கள்,105 ஆண்கள், 32 பெண்கள், 18 குழந்தைகள் மற்றும் 4 பச்சிளங் குழந்தைகள் என 159 பயணிகள் பலியாகி விட்டனர்.

" இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஹூன் "

Monday, May 17, 2010

2 முறை தோல்விக்குப் பின் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி


அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.ஏற்கனவே இரண்டு முறை இந்த ஏவுகணை சோதனை தோல்வியடைந்த நிலையில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரி்ஸ்ஸாவில் சண்டிபூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவு ஏவுதளத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.இந்திய ராணுவத்துக்காக ஏற்கனவே அக்னி-1ஏவுகணை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.

இது 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இந் நிலையில் நடுத்தர ஏவுகணையான அக்னி-2, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடனும் தனியார் பங்களிப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2,000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்த இந்த ஏவுகணை 1 டன் கொண்ட அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடியதாகும்.21 மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணையின் எடை 17 டன். ஒரு டன் அணு ஆயுதத்தின் எடையை குறைத்தால் 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே சென்று தாக்கும் சக்தியுடன் அக்னி-2 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது.ஏற்கனவே இரண்டு முறை இந்த ஏவுகணையின் சோதனை தோல்வியடைந்த நிலையில் இன்று சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

Saturday, May 15, 2010

பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 28 பயணிகள் கருகி பலி


மத்திய பிரதேசம் மண்ட்லா மாவட்டத்தில் சுராஜ்புரா என்ற கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 28 பஸ் பயணிகள் உடல் கருகி இறந்தனர்.

திருமண கோஷ்டியினர் சென்ற பஸ்சின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரம் மற்றும் இரும்பு அடுப்பு, உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், அதன் மூலம் பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 28 பேர் உடல் கருகி பலியானார்கள். இவர்களில் 12 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்தனர்.

Wednesday, May 12, 2010

ராமர்கோயில் கட்டும் இயக்கம் மீண்டும் துவங்கப்படும் தீவிரவாத வி.ஹெச்.பி இயக்கம் அறிவிப்பு.


புதுடெல்லி:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான இயக்கத்தை விசுவ ஹிந்து பரிசத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கம் துவக்கப் போவதாக அறிவித்துள்ளது.இதுத்தொடர்பான நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக வருகிற ஜூலை 12 ஆம் தேதி அயோத்தியாவில் அமைப்பின் மத்திய மானேஜிங் கமிட்டி கூடுகிறது. ராமன் பிறந்த இடத்தில்(?) கோயில் கட்டுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வி.ஹெச்.பியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் வினோத் பன்ஸால் தெரிவித்தார்.

இரண்டு மாடி கோயில் நிர்மாணிப்பதற்கு தேவையான கட்டிடப் பொருட்கள் 60 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் பன்ஸால் தெரிவித்தார். அயோத்தியில் 18 வருடங்களுக்கு பிறகு நடைபெறவிருக்கும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் கடைசியாக வி.ஹெச்.பியின் இத்தகையதொரு கூட்டம் நடந்தது. பசுவதை,கங்கை, கோயில்களை அரசு கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தீவிரவாத வி.ஹெச்.பி அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.