மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, April 11, 2010

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் பயங்கரவாதி மோடி!


இந்திய வரலாற்றில் முதன் முறையாக பதவியில் இருந்து கொண்டே ஒரு முதலமைச்சர் விசாரணைக் குழுவின் முன்பாக, அதுவும் இந்தியாவின் நீதிபரிபாலன அமைப்பின் உச்சம் என வர்ணிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப்புலனாய்வுக்குழுவின் முன் பாக நேர்நின்றார் ஒருவர். யார் அவர்?

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு அவப்பெயர்களை அடுக்கடுக்காக பெற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் இந்த அரும்பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.

1. அதிகாரிகளை கடமைகளை செய்ய வேண்டாம் என கட்டளை யிட்ட குற்றம்.
2. இனப்படுகொலைக்கு சூத்ர தாரியாக இருந்தது.
3. கொலைகாரர்களை தண்டிக் காததோடு அரவணைத்த அக்கிரமம்.

4. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, நிதி, நிவாரணம் போன்ற வற்றிற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்த 59 வயது முன்னணி பா.ஜ.க தலைவர், 27-3-2010 அன்று அகமதாபாத்தில் பழைய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திற்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பாக நேர் நின்றார்.

காங்கிரஸின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69பேர் குல்பர்க் மாளிகையில் படுகொலை செய் யப்பட்ட நிகழ்வு தொடர்பாக மோடி விசாரணைக் குழு முன்பாக நேர் நிறுத்தப்பட்டார்.

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக மோடியை நோக்கி 68 கேள்விகள் சரமாரியாக வீசப்பட்டதாக ஷிமிஜி வட்டாரம் தகவல்கள் தெரிவித்தன.

அதில் 62 கேள்விகளுக்கு மட்டும் அவர் விடையளித்ததாகவும் மொத்தம் 10 மணிநேரம் பதிலளித்த அவர் மிகவும் சோர்வடைந்ததாகவும் என்.டி. டி.வி செய்தியாளர் கூறினார்.

தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக படுகொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்தார்.

நீதியை முடக்கும் விதமாக இதுவரை நடந்து வந்த மோடியை விசாரணைக் குழுவின் முன்பாக நேர் நிறுத்தப்பட்ட நாள் இந்திய ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முக்கியமான நாள் என சமூக நல ஆர்வலர் தீஸ்தா செதல் வாட் தெரிவித்தார்.

விசாரணைப்படலத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் பங்கேற்கவில்லை. விசாரணைக்குழுவின் அதிகாரியான ஏ.கே. மல்ஹோத்ரா இந்த குறுக்கு விசாரணைக் குழுவிற்கு தலைமை ஏற்றார்.

குஜராத் கலவரம் இனப்படு கொலை குறித்து சரமாரி வினாக்கள் வீசப்பட்டாலும் மோடியின் பதில்கள் குறித்த விவரங்கள் அனைத் தும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

மோடி விசாரணைக்குழு முன்பாக நேர்நின்றதற்கு மறுநாள் (மார்ச் 28, 2010) குஜராத் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழா வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜிம்பாப்வே நாட்டின் நீதிபதி அஹ்மத் மூஸா இப்ராஹீம் ஆகிய இருவருடன் இனப்படுகொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மோடியும் ஒரே மேடையில் சேர்ந்து கலந்து கொள்வது குறித்த சமூக நலஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றாக விழாவில் பங்கேற்பது ஏற்புடைய ஒன்றா? என அவர்கள் வினா விடுத்துள்ளனர்.

மோடியோடு சேர்ந்து நிகழ்ச்சி களில் பங்கேற்க வேண்டாம் என இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நீதிபதிகளுக்கு இஹ்சான் ஜாஃப்ரியி மகள் ஜுபேர் ஜாஃப்ரி விடுத்த வேண்டுகோளும் விழலுக்கு இறைத்தநீராயிற்று.

-------------------------
ஆயங்குடி ஹலிபுல்லாஹ்
சவுதி அரேபியா