Thursday, April 8, 2010
இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!
அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும்
படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும் இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..
WikiLeaks என்ற இணையதளம் வெளியிட்டிருக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் கொலை
இரகசியங்கள் அடங்கிய இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில் 2007 ம் ஆண்டு பக்தாத்
நகரில் போராளிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் எப்படி
குறி வைத்து தாக்குகின்றது என்ற உண்மையை உணர்ந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
அமெரிக்க இராணுவத்தால் அப்பாவி ஈராக்கிய மக்கள் மனிதாபிமானமற்ற முறையில்
கொன்று குவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், காயப்பட்ட சிறுமி ஒருவரையும்,காயப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரையும் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல வந்த வாகனம் ஒன்றின் மீதும் மற்றும் உதவிக்கு வந்தவர்கள் மீதும் நடாத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் இந்த காணொளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.தனது ஆயுத வல்லமையினால் முழு உலகையும் அடக்கி ஒடுக்கி தனது ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமையாக வைத்திருக்க முயற்சி செய்யும் அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு மனித உரிமையை போதித்து வருவதோடு, அதன் அடாவடித்தனங்களுக்கு அடிமைப்படாத நாடுகளுக்கு அச்சுறுத்தல்களையும் விட்டு வருகின்றது.
பல முஸ்லிம் நாடுகள் சுற்றி வர பார்த்திருக்க, பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவோடு மிகவும் நேசமாக உறவு வைத்திருக்கும் போதே இந்த படுகொலைகள் அரங்கேறி வருவது எல்லாவற்றையும் விட கொடுமையானதாகும்.
விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் :
http://www.collateralmurder.com/
ஷார்ஜாவில் லுங்கி அணிய தடையா?
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில், பொது இடங்களில் லுங்கி அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் லுங்கி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பலர், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணி புரிகின்றனர். இவர்கள் பொது இடங்களில் லுங்கி அணிந்து சென்று வந்தனர்.
கடந்த வாரம் ஷார்ஜாவில் லுங்கி அணிந்து சென்ற ஆசிய நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள தெற்காசிய நாட்டவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் லுங்கி அணிந்து சென்றவரை போலீசார் ஏன் கைது செய்ய வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளனர். அரபு நாடுகளை பொறுத்தவரை உடல் முழுக்க மறைக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். 'கைது செய்யப்பட்ட நபர் லுங்கியை இருபுறமும் தைக்காமல் வேட்டியை போல அணிந்து சென்றிருப்பார். இதனால், காற்றில் லுங்கி பறக்கும் போது அவரது கால்கள் மற்றவர்கள் பார்க்கும் படியாக தெரிந்திருக்கும். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்' என, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர், வீட்டைத் தவிர வெளியிடங்களில் லுங்கி அணிவதில்லை, என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)