மக்கள் உரிமை படியுங்கள்

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, January 20, 2011

தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதர்களே.....

உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்த  கடமை பட்டுளேன். சமிபத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்  2011 இன்டர்நெட்டில் கண்டு அதிர்ச்சி அடைத்தேன் , காரணம் நமது முஸ்லிம் மக்கள் பலருடைய பெயர் அதில் இடம் பெற வில்லை. இது ஏதோ திட்டமிட்டு முஸ்லிம் வாக்காளர் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளது போல் தோன்றுகிறது.உதாரணமாக எனது ஊரான ஆயங்குடியில்  பேங்க் தெரு மற்றும் வடக்கு தெருவில் தலா ஒருவர் மட்டும் இடம் பெற்றுள்ளார்.இது எதை காட்டுகிறது என்றால் நமது அறியாமையும், சமுக அக்கறை மின்மையை பிரதிபலிக்கிறது. இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பலர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப் பட்டுள்ளனர் (குறிப்பாக பல தெருக்கள்  நீக்கப் பட்டுள்ளது). மேலும் என் குடும்பத்தில் யாருடைய பெயரும் இடம் பெற வில்லை ( தெருவையே காணவில்லை).  சமுதாயடுக்காக  இயக்கம் நடத்துகிறோம் என்று சொல்லும் பல இயக்கங்கள் இது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது விழிப் புரணர்வு செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.

குறிப்பு : வாக்காளர் பட்டியல்  2011  பார்வை இடவும். தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் இந்த தகவலை அனுப்பவும்.

 இப்போது நம்முடைய கடமை என்ன ???


1 . வாக்காளர் பட்டியலில்  தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
2 . பெயர் விடு பட்டோ அல்லது நீக்கப் பட்டோ இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு  முயற்சி செய்ய வேண்டும்.
3 . தங்களுடைய உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்களிடம்   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பட்டுலதா என்பதை விழிப்புணர்வு ஏற்படுட்ட வேண்டும்.
4 . பெயர்,வயது,முகவரி ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை சரி பர்ர்க்க வேண்டும்.
5 . இந்தியா குடிமகனான நமக்கு ஒட்டு போடுவது,வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளனவா என்று அறிந்து கொள்ளுவது நம்முடைய உரிமை மற்றும் கடமையும் கூட.

" 50  ஆண்டுகள் நம் சமுதாயம் உறக்கத்தில் இருந்தது..... இனிமேல்லாவது விழித்துக் கொள்வோம்.....வாருங்கள் சகோதரர்களே....."

--

சமுதாய அக்கறையுடன்,

MOHAMED ISMAIL.MI

Doha - Qatar

Thursday, May 6, 2010

புதுசு புதுசா உணவில் இப்படியும் கலப்படம்...!!

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால்,செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர்.முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது,பாலில் தண்ணீரை கலப்பது,ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது.இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

அவற்றின் பட்டியல் இதோ:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர்.இப்போது கெட்டியான பால் ரெடி.

* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.

* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.

*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.

* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.

* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.

* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.

* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.

* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.

* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.

* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

பொது மக்களே உஷார்..!!