உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்த கடமை பட்டுளேன். சமிபத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 2011 இன்டர்நெட்டில் கண்டு அதிர்ச்சி அடைத்தேன் , காரணம் நமது முஸ்லிம் மக்கள் பலருடைய பெயர் அதில் இடம் பெற வில்லை. இது ஏதோ திட்டமிட்டு முஸ்லிம் வாக்காளர் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளது போல் தோன்றுகிறது.உதாரணமாக எனது ஊரான ஆயங்குடியில் பேங்க் தெரு மற்றும் வடக்கு தெருவில் தலா ஒருவர் மட்டும் இடம் பெற்றுள்ளார்.இது எதை காட்டுகிறது என்றால் நமது அறியாமையும், சமுக அக்கறை மின்மையை பிரதிபலிக்கிறது. இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பலர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப் பட்டுள்ளனர் (குறிப்பாக பல தெருக்கள் நீக்கப் பட்டுள்ளது). மேலும் என் குடும்பத்தில் யாருடைய பெயரும் இடம் பெற வில்லை ( தெருவையே காணவில்லை). சமுதாயடுக்காக இயக்கம் நடத்துகிறோம் என்று சொல்லும் பல இயக்கங்கள் இது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது விழிப் புரணர்வு செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.
குறிப்பு : வாக்காளர் பட்டியல் 2011 பார்வை இடவும். தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் இந்த தகவலை அனுப்பவும்.
இப்போது நம்முடைய கடமை என்ன ???
1 . வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
2 . பெயர் விடு பட்டோ அல்லது நீக்கப் பட்டோ இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
3 . தங்களுடைய உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பட்டுலதா என்பதை விழிப்புணர்வு ஏற்படுட்ட வேண்டும்.
4 . பெயர்,வயது,முகவரி ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை சரி பர்ர்க்க வேண்டும்.
5 . இந்தியா குடிமகனான நமக்கு ஒட்டு போடுவது,வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளனவா என்று அறிந்து கொள்ளுவது நம்முடைய உரிமை மற்றும் கடமையும் கூட.
" 50 ஆண்டுகள் நம் சமுதாயம் உறக்கத்தில் இருந்தது..... இனிமேல்லாவது விழித்துக் கொள்வோம்.....வாருங்கள் சகோதரர்களே....."
--
சமுதாய அக்கறையுடன்,
MOHAMED ISMAIL.MI
Doha - Qatar
No comments:
Post a Comment