மக்கள் உரிமை படியுங்கள்

Thursday, February 18, 2010

இரானுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைக்க சவுதிஅரேபியா மறுப்பு.


ஈரானுக்கெதிராக மீண்டும் தடை ஏற்படுத்த சீனாவை இணங்கச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அரேபியா மறுத்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது சீனா அதிகாரிகளுக்கு சவூதி அரேபியா சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழல் இல்லை என சவூதிஅரேபியா வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான ஸவூத் அல் ஃபைஸல் தெரிவித்தார்.

தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அவர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரமுள்ள நாடு என்ற முறையில் சீனா அவர்களுடைய பொறுப்பை நிர்வகிப்பார்கள். தடை என்பது நீண்டகால பரிகாரமாகும். இதற்கு பதில் உறுதியானதும், அதிக காலம் நீளாத நடவடிக்கைகளும் தான் மேற்க்கொள்ள வேண்டும். இப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஈரானில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலைநிற்க வேண்டும் என ஃபைஸல் தெளிவுப்படுத்தினார்.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானுக்கெதிராக நடவடிக்கை மேற்க்கொள்ள கோரும் அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக ஹிலாரியை சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ராஜதந்திர நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரும் சீனா அமெரிக்காவின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நாடாகும். ஈரானுக்கெதிராக மூன்று தடைகள் தற்போது உள்ளன. நான்காவது தடையை ஏற்படுத்துவதற்குதான் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் முயற்சிச்செய்துவருகின்றன.

No comments: