மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 22, 2010

ஹமாஸ் தலைவர் கொலை பின்னணியில் இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு.

துபாயில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கு தீவிரவாத இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு அனுமதியளித்தான் என டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஹமாஸின் ராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொல்லப்பட்டிருந்தார். அவரைக் கொன்ற கொலையாளிகளை பற்றி துபாய் போலீஸ் தீவிரவமாக விசாரித்து கண்டறிந்தது. இதற்கு க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பதிவான காட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவின. இக்குற்றவாளிகள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொலையாளிகள் தங்கள் நாட்டைச்சார்ந்தவர்களில்லை என்று உறுதிப்படக் கூறின. மேலும் இவர்கள் மொஸாத் என்ற இஸ்ரேலிய தீவிரவாத உளவு அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்டின.

துபாய் போலீஸும் குற்றவாளிகள் தீவிரவாத மொஸாதைச் சார்ந்தவர்களென்றும் மொஸாதின் தலைவரைக் கைதுச் செய்யவேண்டுமென்றும் கோரியது. ஆனாலும் தீவிரவாத இஸ்ரேல் இதுபற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் டைம்ஸ் ஆன்லைன் என்ற பத்திரிகை இதுபற்றிக் கூறுகையில், இஸ்ரேலிய பிரதமர் தீவிரவாதி நெதன்யாகு கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் கொலைச் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை மொஸாதின் தலைவர் மெய்ர் தகானைச் சந்தித்து அளித்தார் என மொஸாத் வட்டாரத்தைச் சார்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

மஹ்மூத் அல் மப்ஹூஹ் உள்ளிட்ட சிலரைக் கொல்வதற்கான ஆபரேசனை நிறைவேற்ற இறுதி ஒப்புதல் அளித்தார் என மொஸாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மப்ஹூஹை கொல்வதற்கு முன்னால் டெல் அவீவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: