Tuesday, March 16, 2010
ஜப்பான் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிக்க கூட்டுத் தொழில்நுட்பம்
ஜப்பானில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்த ஜப்பான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மற்றும் ஜப்பானிய கம்ªபனிகள் மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து கூட்டு தொழில் நுட்ப கம்பெனி ஒன்றை உருவாக்கி உள்ளன.பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் எல்லாம் முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை கம்பெனிகள் தயாரித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் செலவு குறைகிறது.
எலக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் உபயோகத்தைக் குறைத்து அதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியாவதைக் குறைக்க வேண்டும் என்பது ஜப்பானிய அரசின் பருவநிலை மாற்றக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.டொயோட்டா, நிசான், மிட்சுபிஷி, ஃபியுஜி ஹெவி இண்டஸ்ட்ரிஸ், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனிய¤ன் பிரதிநிதிகள் டோக்கியோவில் கூடி இது குறித்து விவாதித்தனர். இந்தக் கம்பெனிகள் லீஃப் என்ற பெயரில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்க உள்ளன.
எலக்ட்ரிக் கார்களுக்கான ரீசார்ஜிங்கின் போது இருக்கவேண்டிய வோல்டேஜ், வேகம், தொழில் நுட்பம் ஆகியவைகளுக்கான ஒரே மாதிரியான தரநிலைகளை கூட்டுத் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கும். ஜப்பானுக்கான தரநிலைகள் வகுக்கப்பட்ட பிறகு அவை சர்வதேச தரநிலைகளாக மாற்றப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment