வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு :
கடன்சுமை தாளாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது.சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.
விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.
வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.
அகிம்சை,மரக்களி உணவு,சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ்.சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.
--------------------------------
உங்களுக்காக
ஆயங்குடி.ஹலிபுல்லாஹ்
சவுதி அரேபியா
--------------------------------
Wednesday, April 14, 2010
Tuesday, April 13, 2010
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே
''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே!பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்:முஸ்லிம் 2911)
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட''என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)
''உண்ணும் போதும்,உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள்.மனைவியிடம்
வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.''(அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,நூல்: முஸ்லிம் 2915)
''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள்.ஒரே (குண) வழியில்
உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால்
அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக)
நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்''என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம்.பிறகு அதே நாளின்
இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி 5204)
ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள்
என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல்
இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று
கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்:
அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில்
நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து
விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)
''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப்
போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.(அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்:அபூதாவூத் 1442)
''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி
அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள்
பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின்
பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன்
விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய
குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள்
விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம்
இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள
தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி
அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு
முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே
நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத்
தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (
அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)
--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்:தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்:வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்:இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி:இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்:உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா? இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
ARTICLE BY :
--------------------------------------------
AYANGUDI. KUDDUSIA UBAID
SINGAPORE
--------------------------------------------
Sunday, April 11, 2010
சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் பயங்கரவாதி மோடி!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக பதவியில் இருந்து கொண்டே ஒரு முதலமைச்சர் விசாரணைக் குழுவின் முன்பாக, அதுவும் இந்தியாவின் நீதிபரிபாலன அமைப்பின் உச்சம் என வர்ணிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப்புலனாய்வுக்குழுவின் முன் பாக நேர்நின்றார் ஒருவர். யார் அவர்?
இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு அவப்பெயர்களை அடுக்கடுக்காக பெற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் இந்த அரும்பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.
1. அதிகாரிகளை கடமைகளை செய்ய வேண்டாம் என கட்டளை யிட்ட குற்றம்.
2. இனப்படுகொலைக்கு சூத்ர தாரியாக இருந்தது.
3. கொலைகாரர்களை தண்டிக் காததோடு அரவணைத்த அக்கிரமம்.
4. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, நிதி, நிவாரணம் போன்ற வற்றிற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்த 59 வயது முன்னணி பா.ஜ.க தலைவர், 27-3-2010 அன்று அகமதாபாத்தில் பழைய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திற்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பாக நேர் நின்றார்.
காங்கிரஸின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69பேர் குல்பர்க் மாளிகையில் படுகொலை செய் யப்பட்ட நிகழ்வு தொடர்பாக மோடி விசாரணைக் குழு முன்பாக நேர் நிறுத்தப்பட்டார்.
69 பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக மோடியை நோக்கி 68 கேள்விகள் சரமாரியாக வீசப்பட்டதாக ஷிமிஜி வட்டாரம் தகவல்கள் தெரிவித்தன.
அதில் 62 கேள்விகளுக்கு மட்டும் அவர் விடையளித்ததாகவும் மொத்தம் 10 மணிநேரம் பதிலளித்த அவர் மிகவும் சோர்வடைந்ததாகவும் என்.டி. டி.வி செய்தியாளர் கூறினார்.
தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக படுகொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்தார்.
நீதியை முடக்கும் விதமாக இதுவரை நடந்து வந்த மோடியை விசாரணைக் குழுவின் முன்பாக நேர் நிறுத்தப்பட்ட நாள் இந்திய ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முக்கியமான நாள் என சமூக நல ஆர்வலர் தீஸ்தா செதல் வாட் தெரிவித்தார்.
விசாரணைப்படலத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் பங்கேற்கவில்லை. விசாரணைக்குழுவின் அதிகாரியான ஏ.கே. மல்ஹோத்ரா இந்த குறுக்கு விசாரணைக் குழுவிற்கு தலைமை ஏற்றார்.
குஜராத் கலவரம் இனப்படு கொலை குறித்து சரமாரி வினாக்கள் வீசப்பட்டாலும் மோடியின் பதில்கள் குறித்த விவரங்கள் அனைத் தும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
மோடி விசாரணைக்குழு முன்பாக நேர்நின்றதற்கு மறுநாள் (மார்ச் 28, 2010) குஜராத் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழா வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜிம்பாப்வே நாட்டின் நீதிபதி அஹ்மத் மூஸா இப்ராஹீம் ஆகிய இருவருடன் இனப்படுகொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மோடியும் ஒரே மேடையில் சேர்ந்து கலந்து கொள்வது குறித்த சமூக நலஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றாக விழாவில் பங்கேற்பது ஏற்புடைய ஒன்றா? என அவர்கள் வினா விடுத்துள்ளனர்.
மோடியோடு சேர்ந்து நிகழ்ச்சி களில் பங்கேற்க வேண்டாம் என இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நீதிபதிகளுக்கு இஹ்சான் ஜாஃப்ரியி மகள் ஜுபேர் ஜாஃப்ரி விடுத்த வேண்டுகோளும் விழலுக்கு இறைத்தநீராயிற்று.
-------------------------
ஆயங்குடி ஹலிபுல்லாஹ்
சவுதி அரேபியா
Thursday, April 8, 2010
இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!
அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும்
படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும் இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..
WikiLeaks என்ற இணையதளம் வெளியிட்டிருக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் கொலை
இரகசியங்கள் அடங்கிய இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில் 2007 ம் ஆண்டு பக்தாத்
நகரில் போராளிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் எப்படி
குறி வைத்து தாக்குகின்றது என்ற உண்மையை உணர்ந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
அமெரிக்க இராணுவத்தால் அப்பாவி ஈராக்கிய மக்கள் மனிதாபிமானமற்ற முறையில்
கொன்று குவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், காயப்பட்ட சிறுமி ஒருவரையும்,காயப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரையும் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல வந்த வாகனம் ஒன்றின் மீதும் மற்றும் உதவிக்கு வந்தவர்கள் மீதும் நடாத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் இந்த காணொளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.தனது ஆயுத வல்லமையினால் முழு உலகையும் அடக்கி ஒடுக்கி தனது ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமையாக வைத்திருக்க முயற்சி செய்யும் அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு மனித உரிமையை போதித்து வருவதோடு, அதன் அடாவடித்தனங்களுக்கு அடிமைப்படாத நாடுகளுக்கு அச்சுறுத்தல்களையும் விட்டு வருகின்றது.
பல முஸ்லிம் நாடுகள் சுற்றி வர பார்த்திருக்க, பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவோடு மிகவும் நேசமாக உறவு வைத்திருக்கும் போதே இந்த படுகொலைகள் அரங்கேறி வருவது எல்லாவற்றையும் விட கொடுமையானதாகும்.
விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் :
http://www.collateralmurder.com/
ஷார்ஜாவில் லுங்கி அணிய தடையா?
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில், பொது இடங்களில் லுங்கி அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் லுங்கி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பலர், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணி புரிகின்றனர். இவர்கள் பொது இடங்களில் லுங்கி அணிந்து சென்று வந்தனர்.
கடந்த வாரம் ஷார்ஜாவில் லுங்கி அணிந்து சென்ற ஆசிய நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள தெற்காசிய நாட்டவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் லுங்கி அணிந்து சென்றவரை போலீசார் ஏன் கைது செய்ய வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளனர். அரபு நாடுகளை பொறுத்தவரை உடல் முழுக்க மறைக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். 'கைது செய்யப்பட்ட நபர் லுங்கியை இருபுறமும் தைக்காமல் வேட்டியை போல அணிந்து சென்றிருப்பார். இதனால், காற்றில் லுங்கி பறக்கும் போது அவரது கால்கள் மற்றவர்கள் பார்க்கும் படியாக தெரிந்திருக்கும். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்' என, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர், வீட்டைத் தவிர வெளியிடங்களில் லுங்கி அணிவதில்லை, என தெரிவித்துள்ளார்.
Monday, April 5, 2010
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிக்கை திருட்டு போனது!
மாலேகான் மற்றும் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரே அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மும்பை காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் கடந்த 2006 ஆம் ஆண்டு குண்டுவெடித்ததில் 16 பேரும் 2008 ல் மும்பை புறநகர் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 100 பேரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த இரு வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது.
இந்த இரு குற்றப்பத்திரிக்கைகளும் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரேயின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ராஜா தாக்கரே தெரிவித்துள்ளார். இவற்றின் நகல்கள் காவல்துறையிடமும் நீதிமன்றத்திலும் இருப்பதால் வழக்கு விசாரணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால், இவ்வழக்கு விசாரணையில் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளவர்களுக்குப்
பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. சாதாரணமாக,குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நகலில் அவர்களுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகளைக் குறித்த விவரம் சாட்சிகளின் பாதுகாப்பு கருதி கொடுக்கப்படுவதில்லை. அரசு தரப்பு சாட்சிகள் யார் என்பதை அறிவதற்காக இவை திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவ்வாறெனில்,அது இவ்வழக்கின் விசாரணையையும் பாதிக்கும் என காவல்துறையினர்
அஞ்சுகின்றனர். குற்றப்பத்திரிக்கைகளைத் துணிச்சலாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)