மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, April 14, 2010

விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு :

கடன்சுமை தாளாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது.சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

அகிம்சை,மரக்களி உணவு,சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ்.சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.

--------------------------------
உங்களுக்காக
ஆயங்குடி.ஹலிபுல்லாஹ்
சவுதி அரேபியா
--------------------------------

No comments: