மக்கள் உரிமை படியுங்கள்

Monday, May 17, 2010

இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்


லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரூன் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவையில் முஸ்லீம் பெண்ணுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான பரோனஸ் சயீதா வர்சி (39) அந் நாட்டு அமைச்சராகிறார்.இவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்.

வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கேமரூன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானது இதுவே முதல் முறையாகும். அந் நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்பதும் இதுவே முதல் முறை.

No comments: