Monday, May 31, 2010
பங்களாதேஷிலும் ஃபேஸ்புக்-குக்கு தடை
டாகா: பாகிஸ்தானைத் தொடர்ந்து பங்களாதேஷிலும் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை பங்களாதேஷ் அரசு அதிகாரப்பூர்வமான உத்தரவாக வெளியிடாவிட்டாலும், அந்நாட்டின் தொலைத் தொடர்புத் துறை கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் ஃபேஸ்புக்கை அனைத்து விதங்களிலும் தடுத்துள்ளோம் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படங்களை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் தடை செய்யப்படும் என்று அரசு செய்தி ஏஜென்ஸியும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சமூக விரோத செய்திகள் மற்றும் விஷயங்கள் ஃபேஸ்புக்கில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரும் ராணுவ அதிகாரிகளும் பேசும் காட்சி ஒன்றை வெளியிட்டதற்காக ஏற்கெனவே யுட்யூப் தளமும் பங்களாதேஷில் தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்களாதேஷில் இண்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment