அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மாதாந்திர மகளிர் சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்:04/03/11 வெள்ளிக்கிழமை நேரம்:சரியாக இரவு 8:30மணிக்கு இன்ஷா அல்லாஹ் சொற்பொழிவாளர்: சகோதரி உம்மு அப்துர்ரஹ்மான் [தலைப்பு:ஒழுக்கம் ஒரு பார்வை] தமிழ் தெரிந்த இலங்கை இந்திய சகோதரிகள் கலந்து கொண்டு மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து அல்லாஹ்வின் அருளைப்பெருமாறு அன்புடன் அழைக்கிறோம். இவண்: இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை |
Wednesday, March 2, 2011
மாதாந்திர மகளிர் சொற்பொழிவு நிகழ்ச்சி
Wednesday, January 26, 2011
Tuesday, January 25, 2011
லயோலா கல்லூரி சர்வே - வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு ??
லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.
இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.
சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.
இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
நன்றி :
savukku.net
Thursday, January 20, 2011
தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதர்களே.....
உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்த கடமை பட்டுளேன். சமிபத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 2011 இன்டர்நெட்டில் கண்டு அதிர்ச்சி அடைத்தேன் , காரணம் நமது முஸ்லிம் மக்கள் பலருடைய பெயர் அதில் இடம் பெற வில்லை. இது ஏதோ திட்டமிட்டு முஸ்லிம் வாக்காளர் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளது போல் தோன்றுகிறது.உதாரணமாக எனது ஊரான ஆயங்குடியில் பேங்க் தெரு மற்றும் வடக்கு தெருவில் தலா ஒருவர் மட்டும் இடம் பெற்றுள்ளார்.இது எதை காட்டுகிறது என்றால் நமது அறியாமையும், சமுக அக்கறை மின்மையை பிரதிபலிக்கிறது. இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பலர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப் பட்டுள்ளனர் (குறிப்பாக பல தெருக்கள் நீக்கப் பட்டுள்ளது). மேலும் என் குடும்பத்தில் யாருடைய பெயரும் இடம் பெற வில்லை ( தெருவையே காணவில்லை). சமுதாயடுக்காக இயக்கம் நடத்துகிறோம் என்று சொல்லும் பல இயக்கங்கள் இது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது விழிப் புரணர்வு செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.
குறிப்பு : வாக்காளர் பட்டியல் 2011 பார்வை இடவும். தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் இந்த தகவலை அனுப்பவும்.
இப்போது நம்முடைய கடமை என்ன ???
1 . வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
2 . பெயர் விடு பட்டோ அல்லது நீக்கப் பட்டோ இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
3 . தங்களுடைய உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பட்டுலதா என்பதை விழிப்புணர்வு ஏற்படுட்ட வேண்டும்.
4 . பெயர்,வயது,முகவரி ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை சரி பர்ர்க்க வேண்டும்.
5 . இந்தியா குடிமகனான நமக்கு ஒட்டு போடுவது,வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளனவா என்று அறிந்து கொள்ளுவது நம்முடைய உரிமை மற்றும் கடமையும் கூட.
" 50 ஆண்டுகள் நம் சமுதாயம் உறக்கத்தில் இருந்தது..... இனிமேல்லாவது விழித்துக் கொள்வோம்.....வாருங்கள் சகோதரர்களே....."
--
சமுதாய அக்கறையுடன்,
MOHAMED ISMAIL.MI
Doha - Qatar
Thursday, January 13, 2011
Subscribe to:
Posts (Atom)