மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, January 31, 2010

இலங்கை முஸ்லிம்களிடம் இருந்தும் விடுதலை புலிகள் பறித்த நான்காயிரம் கிலோ தங்கம் எங்கே?


அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, பொன்சேகா மீது புதியக் குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. உள்நாட்டுப் போரின் போது, புலிகளிடம் கைப் பற்றப்பட்ட நான்காயிரம் கிலோ தங்கம் பற்றிய விசாரணையும் நடக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புலிகள், இயக்கம் துவங்கியபோது, தமிழர்களிடம் இருந்து பணம், பொருட்களை கட்டாயமாக பெற்றனர். யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த பல ஆயிரம் முஸ்லிம்கள், புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது, உடமைகள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 1990 ம் ஆண்டு, ஜூன் 29 ம் தேதி தமிழீழ மீட்பு நிதியம் ஒன்றை புலிகள் துவங்கினர். இதில் நிதியை சேர்க்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதன் ஒரு பகுதியாக குடும்பத்துக்கு தலா இரண்டு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று 1990 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, கட்டாய வசூலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர்.

பெருஞ்செல்வந்தர்களாக இருந்த முஸ்லிம் குடும்பப் பெண்களிடம் இருந்த தங்கம் மற்றும் மதிப்பு மிக்கப் பொருட்களை புலிகள் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போல் பல முறை நடந்துள்ளதாக யாழ்ப்பாணம் வாசிகள் கூறினர். அப்போது பறித்து புலிகளின் பிடியில் வைத்திருந்த தங்கம் 4 ஆயிரம் கிலோ என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தங் கம் மற்றும் தங்க நகைகள் பற்றிய கேள்வி இப்போது எழுந்துள்ளது.வெளிநாடுகளில் வசூலித்த பணம் மற்றும் போதை மருந்து கடத்தலில் கிடைத்தப் பணத்தில் தான் புலிகள் ஆயுதங்களை வாங்கிவந்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

No comments: