மக்கள் உரிமை படியுங்கள்

Wednesday, March 10, 2010

இன்னொரு முறை வலம்: பன்றிக் காய்ச்சல் பீதி நீடிப்பு...


வாஷிங்டன்: "பன்றிக் காய்ச்சல் நோய் மறைந்தாலும், அது மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களாக பரவ வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்காவில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்' என, வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

"வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: கடந்தாண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. ஏராளமானோர் இந்நோயின் தொற்றுக்கு ஆளாகினர்; பலர் இந்நோய்க்கு பலியானார்கள். கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின், பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், தற்போது அந்நோய், மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களாக பரவும் வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தை சேர்ந்த அன்னி சூசெட் கூறுகையில்,"நாம் முழுமையாக, அந்நோயின் பாதிப்பில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என கூற முடியாது. அந்நோய்க்கான எச்1என்1 வைரஸ் இன்னும் பரவிக் கொண்டு தான் உள்ளது. ஆனால், அவை எந்தளவிற்கு பெரியளவில் பரவும் என்பதை முன்னரே தெரிவிக்க முடியாது' என்றார்.

No comments: